Friday, August 12, 2016

பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ?


பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ? ஏன் ஒரே மாதிரியாக இவர்கள் இறக்கிறார்கள் என்ற கேள்வியை முதன் முதலாக முன்வைத்த ஒரே ஊடகம் அதிர்வு இணையம் தான். அது வரை அவ்வப்போது முன் நாள் புலிகள் இறந்தார்கள் என்ற செய்தியை மட்டுமே பல ஊடகங்கள் வெளியிட்டு வந்தது. இன் நிலையில் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தான் சிங்கள ராணுவம் பல காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வந்துள்ளது. அதில் ,

முக்கியமான புலிகள் உறுப்பினர்களை மண்டையில் போட்டு, அவர்கள் உடல்களை எரிப்பது.
சிறிய காயங்களுக்கு உள்ளான புலிகளின் அங்கங்களை அகற்றிவிடுவது. அப்படி என்றால் அவர்கள் மீண்டு வர மாட்டார்கள்
முக்கிய உறுப்பினர்களின் மனைவி பிள்ளைகள் மற்றும் இள நிலை புலிகள் உறுப்பினர்களுக்கு விச ஊசி.
சில வருடங்கள் கழித்து பல விதமான நோய்களை தோற்றுவிக்கக் கூடிய இந்த விச ஊசிகளை எப்படி பாவிப்பது என்பது சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறிந்துகொள்ளலாம். இஸ்ரேல், மற்றும் சீனர்களின் ஆதரவோடு இயங்கிவரும் இந்த வைத்தியசாலைக்கு சில சிங்கள ராணுவ அதிகாரிகள் சென்று , விச ஊசிகளை கொள்வனவு செய்தது மட்டுமல்லாது. அதனை எப்படிப் போடுவது என்று கூட கற்று வந்துள்ளார்கள். வட கிழக்கில் புணர்வாழ்வு முகாமில் முன் நாள் புலிகள் இருந்தவேளை. மற்றும் அவர்கள் வெளியேற முன்னர் என்று, ஏதாவது சிறிய உடல் நலக் குறைவு வந்தாலும் உடனே ஒரு ஊசியை சிங்கள மருத்துவர்கள் பரவலாக எல்லா புலிகள் உறுப்பினர்களுக்கும் போட்டுள்ளார்கள். 2011ல் இவ்வாறு போடப்பட்ட ஊசிகள் நாலு , ஐந்து வருடம் கழித்து தனது வேலையைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் தாம் சென்று இது தொடர்பாக பயிற்ச்சி பெற்று வந்ததை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவில் உள்ள நபர் ஒருவர் ஏற்கனவே ஆமியோடு சேர்ந்து இயங்கும் புலிகள் உறுப்பினருக்கு கூறியுள்ளார். அவரூடாக இந்த தகவல் யாழில் உள்ள சில முக்கிய ஊடகவியலாளர்களுக்கு கசிந்து. அச்செய்தியை நாம் பெற்று இதனை வெளியிடுகிறோம். இதன் காரணமாகவே வடக்கு முதல்வர் வடமாகாண சபையில் இது தொடர்பாக ஒரு பிரேரணையை நிறைவேற்ற உள்ளார். தற்போது எஞ்சியுள்ள முன் நாள் புலிகள் உறுப்பினர்களை, வெளிநாட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்யவேண்டும் என்பது அந்த தீர்மானமாக இருக்கும். அத்தோடு நீதிபதி இழஞ்செழியன் ஊடாகவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
source:athirvu

No comments:

Post a Comment