Monday, May 23, 2016

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?

Balan tholar
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்குமா?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடின் இந்திய அரசு தமிழீழம் பெற்றுத் தர உதவியிருக்கும் என இன்றும் சிலர் முட்டாள்தனமாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசு சிலவேளை தமிழீழத்திற்கு சம்மதித்தாலும் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழம் மலர சம்மதிக்காது என்பதே உண்மை .
ராஜீவ் காந்தி மட்டுமல்ல இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால்கூட தமிழீழம் மலர இந்திய அரசு உதவியிருக்காது.
ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும்கூட ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை.
இலங்கை அரசை மிரட்டி முழு இலங்கையையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே ஆரம்பத்தில் இந்திய அரசு இயக்கங்களுக்கு சில உதவிகள் செய்தது.

பின்னர் இலங்கை அரசு தனது பிடிக்குள் வந்துவிட்டதும் அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியையே இந்திய அரசு மேற்கொண்டது.
அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவம்,
•ஆயிரக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தது.
•பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்து கொன்றது.
•தமிழ் மக்களின் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை நாசமாக்கியது.
இந்திய ராணுவத்தைவிட இலங்கை ராணுவம் மேல் என தமிழ் மக்கள் நினக்கும் அளவிற்கு இந்திய ராணுவம் அழிவுகளை மேற்கொண்டது.
இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு யாரும் நீதி வழங்கவில்லை? இந்தியாவில் எதாவது ஒரு நீதிமன்றத்தில் நியாயம் வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை நிகழந்திருக்காது.
ராஜீவ் காந்தியினால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுக்காதவர்கள் ராஜீவ் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருவதற்கு என்ன தகுதி இருக்கு?
புலிகள் அமைப்பு இந்திய ராணுவத்துடன் போர் புரிந்த வேளை பாகிஸ்தான் உளவு அமைப்பு தேவையான உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் பிரபாகரன் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உதவியை பெற்றுக் கொள்ளவில்லை.
அதுமட்டுமல்ல இந்தியாவுக்குள் போராடிக் கொண்டிருக்கும் சில அமைப்புகள் கூட தங்களுக்கு ஆயுத உதவி செய்யுமாறு கோரிய போது புலிகள் அமைப்பு அதற்கு மறுத்து விட்டனர்.
இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயற்பட விரும்பாத புலிகள் அமைப்பை இந்தியாவே அழிப்பதற்கு பெரிதும் உதவியது என்பதை இனியாவது இந்திய அரசை நம்புவோர் புரிந்து கொள்வார்களா?
தற்போது தமிழர்களின் வளங்கள் யாவும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
•சம்பூரில் 650 ஏக்கர் நிலம் கொடுத்தாயிற்று
•மன்னாரில் எண்ணெய் வயல்கள் கொடுத்தாயிற்று
•புல்மோட்டையில் இல்மனைற் வளம் கொடுத்தாயிற்று
•திரிகோணமலை துறைமுகமும் கொடுத்தாயிற்று
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்கேசன் துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை கொடுத்தாயிற்று
•திக்கம் வடிசாரய நிலையமும் கொடுத்தாயிற்று
இப்படி தமிழர் வளம் ஒவ்வொன்றாக இந்தியாவினால் பறிக்கப்டுகிறது.
அனால் சமஸ்டி தீர்வைக்கூட அதரிக்காத இந்தியா தமிழீழம் பெற்று தரும் என இன்னமும் கூறிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment