Wednesday, April 06, 2016

BBC புகழ் ஜோர்ஜ் அழகையாவுக்கு கான்சர்- மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர்


ஜோர்ஜ் அழகையா என்றால் பிரித்தானியா மற்றும் உலகில் தெரியாத நபர்களே கிடையாது எனலாம். இலங்கை மட்டக்களப்பை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் இவர். அவர் ஊடகத் துறையில் இருந்த அதீத ஆர்வத்தால் 1989 முதல் BBCல் இணைந்து பணியாற்றி. பின்னர் 2006ம் ஆண்டு முதல் முன்னணி செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி வந்தார். கடந்த 2 வருடங்களாக அவர் , வைத்தியசாலையில் கான்சர் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது அவர் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும். அவர் இனி வேலைக்கு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருப்பதை BBC வெளியிட்டுள்ளது. ஈழத் தமிழரான இவர் பிரித்தானியாவில் குறிப்பிடத்தக்க முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவர் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம்.

இவர் பிரான்சிஸ் என்னும் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். கான்சர் என்பது ஒரு கொடிய நோய். இது இனி எவருக்கும் வரக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். வைத்திய சாலையில் தான் தனியாக இருந்த நாட்கள் மிகவும் சோகம் நிறைந்தவை என்றும். தனது வாழ் நாளில் இருண்ட பாகங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனிமை என்றால் என்ன ? அது எவ்வளவு கொடுமையானது என்பதை அன்று தான் உணர்ந்தேன் என்று அவர் ஆங்கில ஊடகமான டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் BBC தொலைக்காட்சியை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் அழகையா நலம் பெற்று திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை நடத்தினார்கள்.
ஆம் அது வீண் போகவில்லை. அவர் மீண்டும் நலமுடம் திரும்பிவந்ததை அதிர்வு இணையமும் வரவேற்கிறது. source:Published on Apr 06, 2016 athirvu

No comments:

Post a Comment