Thursday, September 26, 2013

தலைவர் மகனை சுட்டுக்கொன்ற வீடியோவில் என்ன பிரச்சனை ?

தேசிய தலைவர் பிரபாகரனின் இளைய மகனை சுட்டுக்கொன்ற வீடியோவில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் மலேசியாவில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள். கடந்த மாதம் மலேசியாவின் தலைந்கரான கோலாலம்பூரில் சனல் 4 கின் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. அவ்வேளை அங்கே சென்ற பொலிசாரும் குடிவரவு அதிகாரிகளும் அதனை தடுத்து நிறுத்தி மூன்றுபேரைக் கைதுசெய்தும் உள்ளார்கள். இவர்கள் மேல் வழக்கு பதிவுசெய்துள்ள மலேசியப் பொலிசார் , தணிக்கைக்கு செல்லாமல் வீடியோவை திரையிட்டது குற்றம் என்று கூறியுள்ளார்கள்.


ஆனால் யூ ரியூப், பேஃஸ் புக் மூலம் ஏற்கனவே இப் புகைப்படங்களும் வீடியோகளும் வெளியாகிவிட்டது என்றும், பிரபாகரனின் மகன் இறந்து கிடக்கும் காட்சியை காண்பிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் மலேசிய மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட இவ்வழக்கு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மலேசியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கு அமைவாகவே பொலிசார் குறித்த மாநாட்டிற்குச் சென்று ஆவணப் படம் காட்டுவதை தடுத்து நிறுத்தினார்கள் என்பது ஏற்கனவே வெளியாகியிருந்ததும் அனைவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment