Saturday, October 29, 2011

போதி தருமர் தெலுங்கு வடுகர் - அறிஞர் குணா.

போதி தருமர் பல்லவ இளவரசராவார். பல்லவர்கள் தமிழரல்லர். பல்லவர்கள் வடுகர்கள். வடுகரில் அவர் தெலுங்கு வடுகராவர். பல்லவர் மன்னர்கள் எவருமே தமிழைப் போற்றி வளர்த்தவர்கள் அல்லர். அவர்கள் தொடக்கத்தில் பாகத (பிராகிருத) மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். பின்னர், சங்கதம் என்னும் சமற்கிருத மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டு அம் மொழியைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர். பல்லவர் காலத்துத் தமிழ்ப் புலவர்கள் யாரும் பல்லவ மன்னர்களைப் புகழ்ந்து பாடியதில்லை. இரண்டாம் நந்திவர்மனின்மீது பாடப்பட்ட நந்திக்கலம்பகம் மட்டும் ஒரு விதிவிலக்காகும். 


போதி தருமர் தமிழரின் போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். அவற்றைச் சீனர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். மற்றபடி, அவரைத் தமிழர் என்று கூறி மிகைப்படுத்திக் கூறுவது, வரலாற்று மெய்ம்மைகளுக்குப் புறம்பானதாகும். அவரைப் பற்றிய அரைகுறை அறிவையே ஏழாம் அறிவு படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர் போலும்.

அறிஞர் குணா.

2 comments:

  1. pallavarkal vadukaraka irunthallum avarkal tamil natilthan aatchi purinthanar aavarkarlai tamilalan entru kuramal verena kuruvathu

    ReplyDelete
    Replies
    1. Unmaithan,Vaiko,TamilAruvi Maniyan, Periyar,veeramani,elangovan,Thamarai,Karunanidhi,evangalla Naa thamilan enu solradhilaya adhey madhari Bodhi Dharmarai kudo Tamilan enu Solalaam,eppo enna ketupovadhu

      Delete